பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு

போடியில் 16 வயது சிறுமி திருமணம் முடிந்து கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-10-19 23:15 GMT

போடி புதூரை சேர்ந்த பால்பாண்டி என்பவருடைய மகன் பிருத்விராஜ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் நேற்று முன்தினம் போடி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பிருத்விராஜ் மற்றும் சிறுமியின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்