சட்ட விரோதமாக மது விற்ற 250 பேர் மீது வழக்கு

மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 19:03 GMT

250 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, மாயனூர், தோைகமலை பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

வேலாயுதம்பாளையம்-தோகைமலை

வேலாயுதம்பாளையம் போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு உள்ள டாஸ்மாக் பகுதியில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 31) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

தரகம்பட்டி

தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்