வீட்டின் கதவு-கண்ணாடியை உடைத்த 25 பேர் மீது வழக்கு
வீட்டின் கதவு-கண்ணாடியை உடைத்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி பாலக்கரை பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (48). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு அப்பகுதியை சேர்ந்த சூர்யா, வெற்றிவேல், செல்வமணி, சிவராமன் உள்பட 25 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் ஜெகதீஸ்வரி வீட்டின் கண்ணாடி, கதவு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி சூர்யா உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.