லாட்டரி சீட்டு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

லாட்டரி சீட்டு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

Update: 2022-12-08 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வேலுசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 50), அப்துல் வக்பு(66) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனையிட்டதில், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்