சுண்ணாம்புக்கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு
சுண்ணாம்புக்கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் பகுதிகளில் சுண்ணாம்புக்கற்கள் கடத்தப்பட்டு வருவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் தாந்தோணிமலை போலீசார் கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள வேங்கைக்கல்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 மெட்ரிக் டன் எடை உள்ள சுண்ணாம்புக்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.