இந்து அமைப்பினர் 114 பேர் மீது வழக்கு
இந்து அமைப்பினர் 114 பேர் மீது வழக்கு
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொதுக்கூட்டத்துக்கு எதிராக 2 இடங்களில் இந்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ராஜேஷ் உள்பட மொத்தம் 114 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.