பாலக்கோடு அருகேபெண் உள்பட 3 பேரை தாக்கியவருக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2023-02-12 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 45). விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்துக்காரருமான அம்மாசி (40) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கோபால் தனது நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம்மாசிக்கும், கோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாசி கையில் வைத்திருந்த கத்தியால் கோபாலை தாக்கினார். அப்போது சத்தம் கேட்டு கோபாலின் மனைவி பச்சியம்மாள் (40), மகன் கவியரசு (25) ஆகியோர் அங்கு சென்று தடுத்தனர்.

அந்தசமயம் அவர்களையும் அம்மாசி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அம்மாசி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கோபால், பச்சியம்மாள், கவியரசு ஆகிேயார் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அம்மாசியை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்