பாப்பிரெட்டிப்பட்டி சர்வேயருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

Update: 2023-01-03 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

கொளகம்பட்டி அருகே உள்ள எருக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் லிங்கநாயக்கனஅள்ளியை சேர்ந்த வில்பர்ட் சவுரிராஜ், தனது நிலத்தை அளவீடு செய்து தருமாறு முருகனிடம் மனு கொடுத்தார். ஆனால் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால், வில்பர்ட் சவுரிராஜ், சர்வேயர் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வில்பர்ட் சவுரிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்