தர்மபுரி சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (வயது 29). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கும், அங்கு வந்த கோபி (வயது 37), சிவா (35) ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியதாகவும், அதை தடுக்க முயன்ற பிரியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரியா அளித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.