தர்மபுரியில் லாரி மோதி மின்மாற்றி சேதம்-டிரைவர் மீது வழக்கு

Update: 2022-12-20 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் உள்ள கோதுமை மாவு மில் அருகே சாலை ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மீது அந்த வழியாக சென்ற ஒரு லாரி மோதியது. இதில் அந்த மின்மாற்றி சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மின்வாரிய இளநிலை பொறியாளர் முரளி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாட்லாம்பட்டியை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 41) லாரிய ஓட்டி சென்றபோது, மின்மாற்றியில் மோதியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்