ரெயிலில் அடிபட்டு தச்சுத் தொழிலாளி பலி
வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.;
ஜோலார்பேட்டை
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52), தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.