கரூர் மாவட்டம் பாளையம் தாலுகா வீரணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). தச்சுதொழிலாளி. இவர், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேரடி மலம்பட்டி பகுதியில் உறவினர் கருப்பாயி என்பவரின் வீட்டில் கடந்த 15 நாட்களாக தங்கி தச்சு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சுனைக்கு குளிக்க சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சுனையில் தேடி பார்த்த போது, நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தொழிலாளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.