கர்நாடக மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது
கர்நாடக மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
பேரையூர்,
மதுரை மாவட்டம் வில்லூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக போலம்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வில்லூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 29) என்பவர் மோட்டார்சைக்கிளில் விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 96 மது பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.