பொன்னமராவதி ஒன்றியம், கொன்னைப்பட்டி அருகே வெங்களமேட்டுக்கு காரைக்குடியிலிருந்து அரிசி ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சரக்கு ேவன் டயர் வெடித்ததில் டிரைவர் கட்டுப் பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.