மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
அவினாசி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ெறாரு மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவர்கள்
திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் சந்தீப் குமார் (வயது 21). அதே போல் திருப்பூர் 15வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூ வை சேர்ந்த சங்கரசுப்பிரமணியின் மகன் சக்தி சரன் (21). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சக்தி சரன் ஓட்டினார். பின் இருக்கையில் சந்தீப் குமார் அமர்ந்திருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் சென்றது.
பலி
அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, இவர்களின் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் சந்தீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த சக்தி சரனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
----