கோவையில் இருந்து நோக்கி இரும்பு கம்பிகள் ஏற்றிக்ெகாண்டு சரக்கு வேன் ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. இந்த வேன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்தது. அப்போது வேனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் திடீரென பிரேக் போட்டதால், சரக்கு வேன் ஓட்டுனர் பிரேக் பிடிப்பதற்குள் கார்களின் மீது வேன் மோதியது.இந்த விபத்தில் வேனில் இருந்த இரும்பு கம்பிகள் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்தவர்கள் குனிந்து கொண்டதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போக்குவரத்து போலீசார், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.