இந்து அறநிலையத்துறை வி.ஐ.பி. தரிசன கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்
இந்து அறநிலையத்துறை வி.ஐ.பி. தரிசன கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்
தாராபுரம்
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோட்டைமேடு உள்ளிட்ட 5 பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழாவில் கலந்துகொண்டு பின்னர் கோட்டைமேட்டில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து தைத்திருநாளை முன்னிட்டு உழவர் தினத்தில் கோட்டைமேடு பகுதியில் பொங்கல் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்"இந்து அறநிலைத்துறை வி.ஐ.பி.சாமி தரிசனம் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். சாமி பக்தர்கள் அனைவருக்கும் யார் முன்பு வருகிறார்களோ அவர்களுக்கு இலவச தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.