நாச்சியார்கோவில் குத்துவிளக்கு கண்காட்சி
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு கண்காட்சி
கும்பகோணம்:
கும்பகோணம் ெரயில் நிலையத்தில் "ஒன் ஸ்டேஷன் ஒன் புரோடக்சன்" திட்டத்தின் கீழ் நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனையகம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்னக ெரயில்வே திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வணிக ஆய்வாளர் தங்கமோகன் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் சந்திரசேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகையில், மத்திய அரசின் "ஒன் ஸ்டேஷன் ஒன் புரோடக்சன்" திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 9 ெரயில்வே நிலையங்களில் உலக புகழ் பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் கும்பகோணம் ெரயில்வே நிலையத்தின் மாஸ்டர் ரமேஷ் மற்றும் ெரயில்வே போலீசார், ெரயில்வே பணியாளர்கள் கலந்துகொண்டனர்.