போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-08 19:14 GMT

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Goolge Link-ல் உள்ள விண்ணப்பத்தினை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்