விண்ணப்பதாரர்கள் உதவி முகாம்களில் மேல்முறையீடு செய்யலாம்

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உதவி முகாம்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-18 18:45 GMT

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உதவி முகாம்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உதவி தொகை திட்டமானது கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான குறுஞ்செய்தி 18.9.2023 முதல் இந்த மாத இறுதி வரை அவர்களுடைய செல்போன் எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்

தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் குடும்ப தலைவிகள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக உதவி கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். இந்தநிலையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு என்று அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.

மேல் முறையீடு

எனவே பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துகொண்டு மேல்முறையீடு செய்து பயன்பெறலாம்.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 04365251992, நாகை உதவி கலெக்டர் அலுவலகம் 04365248833, வேதாரண்யம் உதவி கலெக்டர் அலுவலகம் 04369299650 உள்ளிட்ட செல்போன் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்