சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-02-22 20:00 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பெங்களூரு - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்