புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.;

Update:2023-01-27 13:03 IST

சென்னை,

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்த தடையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையல் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்