கால்வாய்களை தூர்வார வேண்டும்
கால்வாய்களை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபேட்டை நகரில் லாலாபேட்டை தெத்து தெருவில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தினமும் சுகாதாரப் பணிகள் நடப்பது இல்லை. கால்வாய்களை தூர்வாருவது இல்லை. எங்குப் பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.