சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2023-10-19 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

பெருமாள்குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வெங்காரம்பேரையூரில் பெருமாள்குளம் உள்ளது. வெங்காரம்பேரையூர், கமலாபுரம், மூலங்குடி, எருக்காட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், குளத்தின் அருகாமையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் இந்த பெருமாள் குளத்தின் படித்துறையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த படித்துறை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் படித்துறையின் படிக்கட்டுகள் மற்றும் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் படித்துறையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் சிரமம் அடைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

கிராம மக்கள் படித்துறையை பயன்படுத்த முடியாமல் போனதால் இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகள் பயன்படுத்தக்கூடிய கூடாரமாக படித்துறை மாறி வருகிறது. இதனால் படித்துறை வழியாக சென்று வரக்கூடிய கிராம மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்