செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு நிறுவனம் மூலம் வீல் சேர், ட்ரைசைக்கிள், காது கேளாதோர் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கு பதிவு செய்ய செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 18-7-2023 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. பதிவு செய்வதற்கு தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, ஆதார் அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். எனவே உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன் பெறலாம்.