மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-15 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, நிலம் மற்றும் வீட்டு மனை பட்டா, வாரிசு சான்றிதழ், சிறு குறு விவசாயிகள் சான்று போன்ற நலத்திட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் 37 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அந்தோணி ராஜ், ஒன்றிய சேர்மன் முனியாண்டி, மண்டல துணை தாசில்தார், தாயமங்கலம் ஊராட்சி தலைவர் மலைராஜ், வருவாய் இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்