பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

Update:2023-02-10 00:15 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் முக்காரெட்டிபட்டி, பையர்நத்தம், எலந்தகொட்டப்பட்டி, குண்டல்பட்டி, பூதநத்தம், புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் ஜீவகலா, துணை வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சாணக்கியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமாரி கண்ணன், கால்நடை ஆய்வாளர் மணிமேகலை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து பேசினர். மேலும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், மனோஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்