விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2023-02-09 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே மீள முடி மன்னார்கோட்டை கிராமத்தில் முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுப்பம்மாள் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சிவரணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயின் இடுபொருள்களை வாங்கி பயன் அடைய வேண்டும். தரிசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, குறைந்த அளவு நீரில் நல்ல மகசூல் தரும் சிறுதானியங்களை பயிரிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. விவசாயிகள் மண்ணின் வளத்தை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசன முறைகளை பின்பற்றுதல், கால்நடைகள் வளர்த்தல், விதை நேர்த்தி செய்து விதைகள் மூலம் பரப்பு நோய்களை கட்டுப்படுத்துதல், கடல் பாசியில் பயன்கள், நாட்டு கோழி வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட சிறப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதில் முத்துராமலிங்கபுரம் என்.எம்.வி. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரதீப் ராஜா, ஸ்ரீகாவேரி அக்ரி மேலாண்மை ஆலோசகர் ஞான ஒளிவேல், தொழில்நுட்ப மேலாளர் ஈஸ்வரி மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்