கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
புத்தகரம் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கீதா பூமிநாதன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர்கள் விஜயகுமார், அசன் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடைகளுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை உதவி டாக்டர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.