பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஊராட்சி மாக்கன்கொட்டாய் கிராமத்தில் கால்கடை பராமரிப்பு சிறப்பு முகாம் நடைப்பெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், ரத்த மாதிரி பரிசோதனை, சினை பரிசோதணை ஆகியவை செய்யப்பட்டன. மேலும் பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஏற்படும் ஊதுகால் தடுப்பு முறைகள், கன்று வளர்ப்பு முறை, மழைக்கால நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீடு திட்டம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கமளிபட்டது. தொடர்ந்து சிறந்த கால்நடைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், ஜெர்த்தலாவ் ஊராட்சிட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், துணைத்தலைவர் ரவி, கால்நடை டாக்டர்கள் கணேசன், முத்து, கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.