கால்நடை சிகிச்சை முகாம்

பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2022-09-11 15:51 GMT

தர்மபுரி அருகே பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர்கள் வாசுதேவி, ஞானசேகரன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும் மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு சினை உள்ளதா? என ஸ்கேன் கருவி மூலம் பார்க்கப்பட்டது. மாடுகளுக்கு சி.ஐ.டி.ஆர் ஹார்மோன் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்