அரூர் கோட்டத்தில் 3 ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம்

Update:2023-07-25 01:00 IST

அரூர்:

அரூர் உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன்படி அரூர் பாட்ஷா பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வட்டார வள மையத்தில் வருகிற 28-ந்தேதியும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வட்டார வள மையத்தில் வருகிற 31-ந்தேதியும், கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வட்டார வள மையத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முட நீக்கு சாதனம், செயற்கை கை மற்றும் கால்கள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி கருவி, கண்பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி உள்ளிட்ட உபகரணங்களை டாக்டர்களின் பரிந்துரை அடிப்படையில் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்