நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான அளவீடு செய்யும் முகாம்

காவேரிப்பாக்கம், சோளிங்கரில் நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான அளவீடு செய்யும் முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

Update: 2022-10-19 18:12 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவிரிப்பாக்கம் மற்றும் சோளிங்கர் வட்டாரத்தில் வசிக்கும் கை அல்லது கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை அல்லது கால்கள் அளவு எடுப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர் தாலுகா அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ சான்று, மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் அட்டை, புகைப்படம்-2 ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்