நகராட்சி பணியாளர்களுக்கு கேக், பரிசுப் பொருட்கள்

நகராட்சி பணியாளர்களுக்கு கேக், பரிசுப் பொருட்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-01-01 17:54 GMT

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சோளிங்கர் நகராட்சியில் அலுவலக பணியாளர்கள், நகராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கேக் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். ஆணையர் பரந்தாமன், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு புத்தாண்டை முன்னிட்டு கேக் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

நகராட்சி உறுப்பினர்கள் டி.கோபால், சிவானந்தம், அன்பரசு, ஆஞ்சநேயன், லோகேஸ்வரி சரத்பாபு, மூ.சுசிலா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர்கள் எபினேசன், ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்