கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-10 18:24 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 59), கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரது தம்பி அதே ஊரைச் சேர்ந்த கிளாரன்ஸ் ரோசாரி (54). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி ராதாகிருஷ்ணன் வி.கைகாட்டி- ஜெயங்கொண்டம் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிளாரன்ஸ் ரோசாரி மற்றும் அவருடைய மகன்களான பிரகாஷ்ராஜ் (22), விஜய் ஸ்டீபன் (25) ஆகியோர் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளாரன்ஸ் ரோசாரி, பிரகாஷ்ராஜ், விஜய் ஸ்டீபன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்