ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி தீவிரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. வாக்குச்சாவடிகள் அமைந்து உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளில் வரையப்பட்டு உள்ள படங்களை மறைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளில் உள்ள படங்களை மறைக்கும் வகையில் காடா துணிகளை திரையாக அமைத்து இருந்தனர். கடந்த காலங்களில் படங்களுக்கு மேல் காகிதம் கொண்டு ஒட்டி வைத்து விடுவார்கள். தேர்தலுக்கு பின்னர் அதை எடுக்கும்போது படங்கள் வீணாகி விடும். ஆனால், இந்த முறை காடா துணி வைத்து மறைத்து இருப்பதால் படங்கள் சேதமாகாது என்று ஆசிரிய-ஆசிரியைகள் தெரிவித்தனர்.
இதுபோல் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் இதுபோன்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.