100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ராட்சத விழிப்புணர்வு பலூன்- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது
இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ராட்சத விழிப்புணர்வு பலூன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.;
இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ராட்சத விழிப்புணர்வு பலூன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.
ராட்சத பலூன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத விழிப்புணர்வு பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விழிப்புணர்வு வாசகம்
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) என்.பொன்மணி, தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டனர். 35 அடி சுற்றளவு மற்றும் 15 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்த பலூனில் தேர்தல் தேதி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி சண்முகவடிவு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கலைமாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.