திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள், வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் முடிவு
திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள், வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியானது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கழுமரம் கிராமம் மற்றும் வடமருதூர் கிராமம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் இறந்து விட்டதால், தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் 9-ந்தேதி நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
அதன்படி, சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் நேற்று காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்றது . கழுமரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்ட நிலையில் இதில் ராமச்சந்திரன் 1026 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று வடமருதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்ட நிலையில் 1658 ஓட்டுகள் பெற்று மலர் கொடி வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை தோதல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் வழங்கினார். முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஒன்றிய அலுவலகம் முன்பு திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ரிஷிவந்தியம் ஒன்றியம் பள்ளிப்பட்டு கிராம ஊராட்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் தேர்தல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் 162 ஓட்டுகள் பெற்று சாருமதி என்பவர் பெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணசாமி வெற்றி சான்றிதழை வழங்கினார்.