கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்
கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என கலெக்டர் கூறினார்.;
விருதுநகரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு தீபாவளியையொட்டி ரூ.34. 80 லட்சம் கைத்தறி துணிகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் ரூ.65 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ரக ஆடைகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள், விற்பனையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.