மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலதிபர் பலி

மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்.

Update: 2023-08-26 14:00 GMT

வாலாஜா

மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்.

நெமிலி தாலுகா புதுப்பட்டு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஹரிதாஸ் (வயது 34). சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் நிறுவனமும் நடத்தி வந்த இவர் ஏ.சி. மெக்கானிக்காகவும் வேலை செய்தார்.

மடிப்பாக்கத்தில் வசித்து வரும் இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வாரட். இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் வாலாஜாவிற்கு வந்த ஹரிதாஸ் புதுப்பட்டு கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

தென்கடப்பந்தங்கல்- முசிறி சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிள் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரிதாஸ் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த புகாரின் பேரில் உடலை போலிசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்