ராணிப்பேட்டைக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

ராணிப்பேட்டைக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 16:24 GMT


ராணிப்பேட்டை நகரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. ராணிப்பேட்டையிலும், அதைச் சுற்றி உள்ள பல கிராமங்களிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராணிப்பேட்டை அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இத்தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். புகழ் பெற்ற 'பெல்' நிறுவனமும் அப்பகுதியில் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டையில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு செல்வது என்றாலும், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வருவது என்றாலும், போதுமான பஸ் வசதி இல்லை. பெரும்பாலான பஸ்கள் ராணிப்பேட்டை பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. ஒரு சில பஸ்களே ராணிப்பேட்டைக்குள் வந்து செல்கின்றன. அனைத்துப் பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டைக்கு வந்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்