பாம்பன் பாலத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் படுகாயம் - நூலிழையில் பயணிகள் உயிர் தப்பினர்...!
பாம்பன் பாலத்தில் அரசு பஸ், தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.;
ராமேசுவரம்,
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வந்த அரசு மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. அப்போது பாலத்தின் தடுப்பு சுவரில் தனியார் பஸ் மோதி நின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து 2 பஸ்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். பலர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், விபத்துக்கு உள்ளான 2 பஸ்சையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.