சேலம்:
சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 115 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மற்றும் தேனி:
திண்டுக்கல், தேனியில் இயங்கக்கூடிய 319 பஸ்களில் 94% பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து 151 பஸ்களும் தேனியில் இருந்து 150 பஸ்களும் இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத எல்.பி.எப்., ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினர் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பணிமனைகளில் இருந்து 50% பஸ்கள் இயக்கப்படுகின்றன. 763 பேருந்துகளில் 50% பஸ்கள் தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
கோவை:
கோவையில் உக்கடம் மற்றும் சுங்கம் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நகர பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. பணிமனைகள் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 90% பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை:
தஞ்சை மாநகர் பகுதிகளில் 93 பேருந்துகளில் 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேவேளை, மாவட்டத்தில் 125 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மதுரை:
மதுரையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை நிலவரப்படி மொத்த பஸ்களில் 10% கூட இயக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மதுரையில் இருந்து சென்னை, புதுவை, திருச்சி, நெல்லைக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேவேளை, ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புதுக்கோட்டை;
புதுக்கோட்டையில் வேலைநிறுத்தத்தால் பஸ் சேவை பாதிக்கப்படவில்லை. காலை 6 மணிக்கு சராசரியாக 30 பஸ்கள் இயக்கப்படவேண்டிய இடத்தில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற பணிமனைகளில் இருந்து 70%-க்கும் மேலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் சராசரியாக 20 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய இடத்தில் 8 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மதுராந்தகத்தில் சராசரியாக 22 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய இடத்தில் 8 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கம்:-
வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் சென்னையில் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பணிமனைகளிலிருந்து அனைத்து வழித்தடங்களுக்கு பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
பஸ்கள் இயக்கம் குறித்து பயணிகளுக்கு எவ்வித அச்சமும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பந்தாங்கல் பணிமனையில் இருந்து குன்றத்தூர், பிராட்வே, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.