ரூ.65 லட்சத்தில் பஸ் நிறுத்தம், அரசு பள்ளிகளுக்கு சுற்றுசுவர்

ரூ.65 லட்சத்தில் பஸ் நிறுத்தம், அரசு பள்ளிகளுக்கு சுற்றுசுவர் அமைக்கும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2022-08-17 17:55 GMT

கந்திலி ஒன்றியம் கரியம்பட்டி அருகே உள்ள அரசுகலைகல்லூரியில் சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் திருப்பத்தூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பஸ்சில் வருகிறார்கள். கரியம்பட்டி கூட்ரோடு அருகே இறங்கி கல்லூரிக்கு செல்ல பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ் நிறுத்தம் தேவை என நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கி, பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் குனிச்சி ஊராட்சி, பெரிய குனிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொளகரம் பட்டி அரசு தொடக்கப்பள்ளி , குனிச்சி பெரியார் அரசு தொடக்கப்பள்ளி, சின்ன குனிச்சி ஆயப்பன்நகர் அரசு தொடக்கப்பள்ளி, ஆகிய பள்ளிகளுக்கு ரூ.54 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. கந்திலி ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், கே. ஏ.குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் கே..சி.ராணி சின்ன கண்ணு, மரகதம் ஜெயசீலன் ஆ௳ியோர் முன்னிலை வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் மருதுபாண்டி, லீனா கோவிந்தராஜ் வரவேற்றனர். பயணிகள் நிழற்கூடம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கு.ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் ஜி.மோகன்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், துணைத் தலைவர் முனியம்மா வெங்கடேசன், அவைத் தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு வாங்கி தலைவர் மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்