அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல்
சுவாமிமலை அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சுவாமிமலை அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பஸ் கண்ணாடி உடைப்பு
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது45). இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகர பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கும்பகோணத்தில் இருந்து திருபுறம்பியம் வரை செல்லும் நகர பஸ்சில் பணியில் இருந்த அவர், திருப்புறம்பியம் கடைத்தெருவில் பஸ்சை நிறுத்தி இருந்தார். அப்போது திருப்புறம்பியம் வெள்ளாள தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் முருகராஜ் (35) என்பவர் பஸ்சின் பின்புற கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் முருகன் பஸ்சின் கண்ணாடியை ஏன் உடைத்தாய்? என முருகராஜை கேட்டார். அதற்கு முருகராஜ், முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கைது
இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.