பெண்ணை மிரட்டிய பஸ் கண்டக்டர் கைது
சுத்தமல்லியில் பெண்ணை மிரட்டிய பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 32). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது வீட்டின் முன்பு நின்ற, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (25) என்பவரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தனலட்சுமி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி கார்த்திக் ராஜாவை கைது செய்தார்.