லாரி மீது பஸ் மோதல்; 7 பேர் காயம்

போளூரில் நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 7 போ் காயம் அடைந்தனர்.;

Update:2023-05-06 21:33 IST

சிதம்பரத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பஸ் சென்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே குழந்தை ஒன்று வந்ததால், குழந்தை மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த கரும்பு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுதொடர்பாக போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்