தடுப்புக்கட்டையில் பஸ் மோதி விபத்து; 8 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் பஸ் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-04-19 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கோவையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் 8 பேர் காயமடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்