புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தடுப்பணை மீண்டும் நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-28 11:33 GMT

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தடுப்பணை மீண்டும் நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் வெள்ளம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு 15 அடி உயரத்தில் தடுப்பணை கட்டி உள்ளது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி தமிழக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை வழியாக அம்பலூர் தரைப்பாலத்தை கடந்து கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்ிருக்கிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எச்சரிக்கை

தொடர்ந்து மழை பெய்தால் ஆம்பூர், வேலூர் பாலாற்று பகுதிகளுக்கும் இந்த தண்ணீர் அதிக அளவில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புல்லூர்தடுப்பணை பகுதியை தமிழக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன நிறுத்தம் பகுதியில் உள்ளவர்களிடம் மிரட்டி வருவதாகவும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராக, பொதுமக்களும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்