கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

Update: 2023-05-28 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் தர்மமுனீஸ்வரர் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வேலாயுதபட்டினம்-தேவகோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 25 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லல் உடையப்பா சக்தி மற்றும் வாடிப்பட்டி ராஜா ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை பெத்தாச்சிகுடியிருப்பு ராக்காச்சி மற்றும் உஞ்சனை உமாதேவி வண்டியும், 3-வது பரிசை வெற்றியூர் செல்லத்துரை மற்றும் ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் வண்டியும், 4-வது பரிசை ஆலங்குளம் மணிகண்டன் வண்டியும், 5-வது பரிசை சக்கந்தி மில்கேட் பாண்டி ஆகியோர் வண்டியும் பெற்றது.

சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கைக்குடி ராஜேந்திரன் மற்றும் மேட்டுப்பட்டி ராஜாமணி வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 3-வது பரிசை கலிப்புலி காளியம்மன் மற்றும் ஏரியூர் பெத்தாச்சி வண்டியும், 4-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி மற்றும் வாடிப்பட்டி பாண்டி வண்டியும், 5-வது பரிசை மேலப்பூங்குடி சுந்தரவள்ளி சுப்பிரமணியன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்